Enter your Email Address to subscribe to our newsletters

நாமக்கல், 28 ஆகஸ்ட் (ஹி.ச.)
நாமக்கல்லில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை வளாகத்தில், ஐ.ஆர்.எம். எனர்ஜி லிமிடெட் நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய சி.என்.ஜி. எரிபொருள் நிலையத்தை போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர். விஜய் தமிழன் பார்த்திபன் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்கும் வகையில் டீசல் பேருந்துகளை படிப்படியாக குறைத்து, சி.என்.ஜி. மற்றும் மின்சார பேருந்துகளாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
நாமக்கல்லில் தற்போது 144 சி.என்.ஜி. பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கேஸ் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இனிவரும் காலங்களில் மின்சார பேருந்துகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்.
விபத்துகளை குறைக்கும் வகையில் பேருந்துகளுக்கு வேகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பப் பணியாளர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.
அதிக கட்டணம் வசூலித்த தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணம் தொடர்ந்து வழங்கப்படும். மினி பேருந்துகள் தேவையான பகுதிகளில் இயக்கப்படும்.
கிராமங்களையும் நகரங்களையும் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், எதிர்காலத்தில் ஏசி பேருந்துகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும் என்றார்.
Hindusthan Samachar / ANANDHAN