Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 28 ஆகஸ்ட் (ஹி.ச.)
நெல்லை தச்சநல்லூர் அருகே ஊருடையான் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள முத்துராமலிங்கத் தேவர் பீடத்தின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் வீசி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையாளர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் ஊருடையான் குடியிருப்பு பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரண்டு பேரை போலீசார் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து, ஊருடையான் குடியிருப்பு பகுதிக்கு தொடர்பு இல்லாத நபர்கள் ஊருக்குள் வருவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஊர் எல்லைப் பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெட்ரோல் வீச்சு சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருவதையடுத்து, முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஊர் முழுவதும் தொடர்ந்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam