உலக சமஸ்கிருத தினம்- பிரதமர் மோடி வாழ்த்து
புதுடெல்லி , 28 ஆகஸ்ட் (ஹி.ச.) சமஸ்கிருத மொழியின் சிறப்பை போற்றும் வகையில் ஆண்டுதோறும் உலக சமஸ்கிருத தினம் கொண்டாடப்படுகிறது. இந்து மத நாள்காட்டியின்படி, ஷ்ரவண மாதத்தில் வரும் பவுர்ணமி தினமான ஸ்ரவண பூர்ணிமா (ரக்ஷா பந்தன்) நாளில் இத்தினம் அனுசரிக
A


புதுடெல்லி , 28 ஆகஸ்ட் (ஹி.ச.)

சமஸ்கிருத மொழியின் சிறப்பை போற்றும் வகையில் ஆண்டுதோறும் உலக சமஸ்கிருத தினம் கொண்டாடப்படுகிறது.

இந்து மத நாள்காட்டியின்படி, ஷ்ரவண மாதத்தில் வரும் பவுர்ணமி தினமான ஸ்ரவண பூர்ணிமா (ரக்ஷா பந்தன்) நாளில் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.

இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், “உலக சமஸ்கிருத தின நல்வாழ்த்துகள்.

ஷ்ரவண பவுர்ணமி நாளில் சமஸ்கிருதத்தின் அழியாத சிறப்பையும், செழிப்பையும் நாம் கொண்டாடுகிறோம்.

இந்தியாவின் அறிவு, சிந்தனை மற்றும் படைப்பாற்றலை தொடர்ந்து கடத்தி வந்த மொழியாக சமஸ்கிருதம் திகழ்கிறது. பல்வேறு துறைகளில் இன்றும் அதன் ஆக்கபூர்வமான தாக்கத்தை காண முடிகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்தியாவிலும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் சமஸ்கிருதத்தை கற்பவர்கள் மற்றும் கற்பிப்பவர்களை பாராட்டியுள்ள பிரதமர் மோடி, சமஸ்கிருதத்தில் அடங்கியுள்ள காலத்தால் அழியாத அறிவுச் செல்வங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க பாடுபடுபவர்களுக்கும் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA