Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 ஆகஸ்ட் (ஹி.ச.)
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் ஆனந்த கணேசனின் மகன் ஆதி (24)
இவர் சென்னையில் தங்கி, பிசியோதெரபிஸ்டாக பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது.
வேலைக்கு ஏற்ற ஊதியம் கிடைக்காததால் அவர் கடந்த சில நாட்களாக மன விரக்தியில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வணிக வளாகத்தின் 9-வது
மாடியில் இருந்து குதித்து, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நுங்கம்பாக்கம் போலீசார், அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், ஆதி தற்கொலை செய்து கொண்டதற்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலை தொடர்பான விரக்தி காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Hindusthan Samachar / P YUVARAJ