Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 ஆகஸ்ட் (ஹி.ச.)
செப்டம்பர் 1-முதல் அறிவித்த வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழ்த் திரைப்படத்துறையில் தற்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, தமிழ் நாடு அரசு கவனத்திற்க கொண்டு சேங்க்கும் வகையில், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், மற்றும் தமிழ்த் திரைப்பட தடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகியோர் இணைந்து கடந்த 26.08.2026 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகனை சந்தித்து பிரச்சனைகளை எடுத்துரைத்து மனுவாக அளித்துள்ளோம்.
அந்த மனுவினை பரிசீலித்த அமைச்சர் சம்பந்தப்பட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்திற்கும் தற்போது தமிழ்நாட்டில் திரைப்பட வெளியீட்டில் என்ன நடைமுறை உள்ளதோ அதனை தொடர்ந்து பின்பற்றுங்கள் சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு சம்பத்தப்பட்ட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள், ஆகியோரை தமிழ்நாடு அரசு அழைத்து மேற்படி பிரச்சனைக்கு தீர்வு காணும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களையும் தற்போது வேலை நிறுத்தம் என்பது வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார்.
மேற்படி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுகாண மாண்புமிகு.தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று, முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலோடு முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என்று உறுதியாக தெரிவித்ததின் அடிப்படையில், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் இணைந்து செப்டம்பர் 1-முதல் அறிவித்த (புதிய திரைப்படங்கள் வெளியீடு படப்பிடிப்பு பணிகள், போஸ்ட் புரொடக்க்ஷன்) வேலை நிறுத்தம் தற்போது ஒத்திவைக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b