Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 28 ஆகஸ்ட் (ஹி.ச.)
ரக்ஷா பந்தன் திருநாளை முன்னிட்டு, பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழக மக்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
அண்ணன்–தங்கை இடையேயான அன்பு, பாசம் மற்றும் சகோதரத்துவத்தைப் போற்றும் அழகான திருநாளாக ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
ரக்ஷா பந்தன் நாளில் சகோதரிகள் தங்களது சகோதரர்களின் வலது கை மணிக்கட்டில் ராக்கி கயிறைக் கட்டி, அவர்களின் நீண்ட ஆயுள், வெற்றி மற்றும் நல்வாழ்வுக்காக இறைவனைப் பிரார்த்திப்பது வழக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், சகோதரர்களும் தங்களது அன்புச் சகோதரிகளை வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பதாக உறுதியளிக்கும் உன்னதமான தருணமாக ரக்ஷா பந்தன் விளங்குகிறது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும், சகோதர–சகோதரி பாசத்தின் வலிமையையும் எடுத்துரைக்கும் இந்தத் திருநாள், குடும்பங்களிடையே அன்பையும் ஒற்றுமையையும் மேலும் வலுப்படுத்தட்டும் என்றும் அவர் வாழ்த்தியுள்ளார்.
மேலும், ரக்ஷா பந்தன் திருநாள் ஒவ்வொரு குடும்பத்திலும் அன்பு, ஒற்றுமை, மகிழ்ச்சி, அமைதி மற்றும் வளத்தைப் பெருகச் செய்யட்டும் எனவும் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அண்ணன்–தங்கை உறவின் பாசத்தையும், ஒருவருக்கொருவர் துணையாக நிற்கும் உறுதிப்பாட்டையும் நினைவுபடுத்தும் வகையில், நாடு முழுவதும் இன்று ரக்ஷா பந்தன் திருநாள் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.
Hindusthan Samachar / P YUVARAJ