Enter your Email Address to subscribe to our newsletters

உத்தரப்பிரதேசம், 28 ஆகஸ்ட் (ஹி.ச.)
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் பாஜக மேயர் உமேஷ் கவுதம் ஏற்பாடு செய்த ரக்ஷா பந்தன் நிகழ்ச்சியில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டதால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி பல பெண்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ரக்ஷா பந்தன் பண்டிகைக்கு முந்தைய நாளில், பரேலி கிளப் மைதானத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெண்களுக்கு சேலைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சேலைகளைப் பெறுவதற்காக எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் பெண்கள் திரண்டதால், நிகழ்ச்சி நடைபெற்ற பகுதியில் கடும் நெரிசல் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கூட்டத்தில் சிக்கிய சில பெண்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர்கள் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பரேலி மாவட்ட மூத்த காவல் கண்காணிப்பாளர் அனுராக் ஆர்யா கூறுகையில், நிகழ்ச்சி தொடர்பாக காவல்துறைக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றார்.
மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை காவல்துறையில் எந்தவிதமான அதிகாரப்பூர்வ புகாரும் பதிவு செய்யப்படவில்லை என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P