Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 ஆகஸ்ட் (ஹி.ச.)
சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மீதான மானியக் கோரிக்கையில் அமைச்சர் சம்பத்குமார் பதிலுரை ஆற்றினார்.
+1 மாணவர்களுக்கு 5.32 நவீன சைக்கிள்கள் வழங்க ரூ. 277 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகைக்காக ரூ. 202 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சமூக நீதி விடுதிகளில் சுகாதாரம் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். விடுதி காப்பாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில் விடுதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. அவற்றை முதலமைச்சர் நேரில் ஆய்வுசெய்து உணவு, இருப்பிடம், விளையாட்டு, பொழுதுபோக்கு நேரங்கள் எல்லாம் எப்படி இருக்கிறது? என்று மாணவர்களிடம் கேட்டறிந்தார்.
விரைவில் மிதிவண்டி கொள்முதல் ஒப்பந்த புள்ளி கோரப்படும். விடுதிகளில் தூய்மை, இருப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மாணவர்களுக்கு நல்ல படிக்கக்கூடிய சூழலை அரசு உருவாக்கி கொடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார் என்றார்.
Hindusthan Samachar / ANANDHAN