Enter your Email Address to subscribe to our newsletters

ஐதராபாத் , 28 ஆகஸ்ட் (ஹி.ச.)
ஐதராபாத்தில் திருமணம் செய்து கொள்வதாக கூறி நடிகையை ஏமாற்றியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தெலுங்கு திரைப்பட இயக்குனர் பவன் சாதினேனியை கோல்கொண்டா போலீசார் கைது செய்தனர்.
ஐதராபாத் ஷேக் பேட்டை ஜெய்ஹிந்த் நகரில் வசித்து வரும் நடிகை ஒருவர், கோல்கொண்டா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதில், விஜயவாடாவை சேர்ந்த தெலுங்கு திரைப்பட இயக்குனர் பவன் சாதினேனி (40) தன்னுடன் பழக்கத்தில் இருந்து வந்ததாகவும், தன்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியதாக தெரிவித்துள்ளார்.
ஆனால், பின்னர் அவர் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், இதனால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் கூறியிருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் கோல்கொண்டா போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் இயக்குனர் பவன் சாதினேனியை போலீசார் கைது செய்தனர்.
பவன் சாதினேனி தெலுங்கில் ‘பிரேமா இஷ்க் காதல்’, ‘சாவித்திரி’, ‘சேனாபதி’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA