Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 ஆகஸ்ட் (ஹி.ச)
உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி, செப்டம்பர் 8, 2026 வரை மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது.
இந்த திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சென்னையில் இருந்து வேளாங்கண்ணிக்கு இன்று மட்டும் 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
திருவிழாவில் கலந்து கொண்டு திரும்பும் பக்தர்களின் வசதிக்காக, நாளை வேளாங்கண்ணியில் இருந்து சென்னைக்கு 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
திருவிழாவின் முக்கிய நாளான செப்டம்பர் 8-ம் தேதியை முன்னிட்டு, சென்னையில் இருந்து வேளாங்கண்ணிக்கும், வேளாங்கண்ணியில் இருந்து சென்னைக்கும் தலா 150 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, சென்னை மட்டுமல்லாது தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வேளாங்கண்ணிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
திருவிழா காலத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால், கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதுடன், முன்பதிவு வசதியும் செய்யப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b