துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் நாளை ஈரோடு வருகை - ட்ரோன்கள் பறக்க தடை
ஈரோடு, 28 ஆகஸ்ட் (ஹி.ச.) ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். டெல்லியில் இருந்து தனி விமான மூலம் வரும் குடியரசு துணைத
Vice President C.P. Radhakrishnan to visit Erode tomorrow


ஈரோடு, 28 ஆகஸ்ட் (ஹி.ச.)

ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.

டெல்லியில் இருந்து தனி விமான மூலம் வரும் குடியரசு துணைத் தலைவர் கோவை விமான நிலையம் வந்தடைந்து, அதன் பிறகு ஹெலிகாப்டர் மூலம் கல்லூரி வளாகத்திற்கு வருகின்றார். அதன் பிறகு அங்கு நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றார்.

துணை ஜனாதிபதி சி பி ராதாகிருஷ்ணன் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் ஆகியோர் கொங்கு கல்லூரியில் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை முன்னிட்டு அப்பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் ஈரோட்டில் நாளை ட்ரோன்கள் பறக்க தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி, நிகழ்ச்சி நடைபெறும் கல்லூரி வளாகத்தை சுற்றி 2 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு ட்ரோன்கள், ஆளில்லா விமானங்கள் மற்றும் பிற வான்வழி புகைப்பட கருவிகளை இயக்குவதற்கு தடை விதிக்கப்படுகிறது.

தடையை மீறி ட்ரோன்கள் பறக்கவிடப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை எச்சரித்துள்ளது. துணை குடியரசுத் தலைவரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பலத்த போலீஸ் பாதுகாப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மண்டல ஐஜி ரம்யபாரதி, ஈரோடு மாவட்ட எஸ்பி கிரண் சுருதி ஆகியோர் தலைமையில் சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b