விளாத்திகுளத்தில் போலீசாரிடம் இருந்து விசாரணைக் கைதி தப்பியோட்டம் - இரண்டாவது முறையாக தப்பியதால் பரபரப்பு
தூத்துக்குடி, 28 ஆகஸ்ட் (ஹி.ச.) தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியைச் சேர்ந்த சந்திரசேகரின் மகன் நிரஞ்சன் (19). கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி விளாத்திகுளம் மீனாட்சிபுரத்தில் நடைபெற்ற அடிதடி சம்பவம் தொடர்பாக விளாத்திகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை
கைதி


தூத்துக்குடி, 28 ஆகஸ்ட் (ஹி.ச.)

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியைச் சேர்ந்த சந்திரசேகரின் மகன் நிரஞ்சன் (19). கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி விளாத்திகுளம் மீனாட்சிபுரத்தில் நடைபெற்ற அடிதடி சம்பவம் தொடர்பாக விளாத்திகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

பின்னர் கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிரஞ்சன், மார்ச் 5-ஆம் தேதி இரவு சிறையின் சமையலறை பகுதி வழியாக மேலே ஏறி வெளியே குதித்து தப்பியோடினார்.

அடுத்த நாள் மீனாட்சிபுரம் அருகே காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்த நிரஞ்சனை போலீசார் கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.

பின்னர் ஜாமினில் வெளியே வந்த அவர், வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் முறையாக ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று விளாத்திகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிரஞ்சனை, நீதிபதி உத்தரவின்பேரில் கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைக்க போலீசார் அழைத்துச் சென்றனர்.

வழியில் விளாத்திகுளம்–சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள ஹோட்டலில் உணவு சாப்பிடுவதற்காக போலீசார் அவரை அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது போலீசாரை ஏமாற்றிவிட்டு நிரஞ்சன் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

தகவலறிந்த போலீசார் தப்பியோடிய நிரஞ்சனை பல்வேறு இடங்களில் தேடி வருகின்றனர்.

ஏற்கனவே ஒருமுறை கிளைச்சிறையில் இருந்து தப்பிய நிரஞ்சன், தற்போது இரண்டாவது முறையாக போலீசாரின் பிடியிலிருந்து தப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் போலீசாரின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளதுடன், விளாத்திகுளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam