கிரிக்கெட் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவோம் - சுப்மன் கில்!
புதுடெல்லி , 28 ஆகஸ்ட் (ஹி.ச.) இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி முழுமையாக கைப்பற்றியிருந்தால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்துக்கு முன்னேறியிருக்கும். ஆனால் 2-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்ததால், 51.52 சதவீத
A


புதுடெல்லி , 28 ஆகஸ்ட் (ஹி.ச.)

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி முழுமையாக கைப்பற்றியிருந்தால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்துக்கு முன்னேறியிருக்கும்.

ஆனால் 2-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்ததால், 51.52 சதவீத புள்ளிகளுடன் இந்தியா 5-வது இடத்தில் நீடிக்கிறது.

இது குறித்து இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் கூறியதாவது:-

நவம்பர் மாதம் நியூசிலாந்தில் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறோம்.

அதைத்தொடர்ந்து சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட முக்கியமான தொடர் நடைபெற உள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான தொடர் எங்களுக்கு சிறப்பாக அமைந்தால், அதன்பிறகு டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பு இருக்கும்.

அந்த வாய்ப்பு இருக்கும் வரை நம்பிக்கையுடன் தொடர்ந்து போராடுவோம். டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்த டெஸ்ட் போட்டியின் கடைசி 3 நாட்களில் இலங்கை வீரர்கள் சிறப்பாக விளையாடினர். தொடக்கத்தில் நாங்கள் தாக்குதல் பாணியில் விளையாடினோம்.

ஆனால் போட்டி செல்லச் செல்ல ஆடுகளம் மிகவும் மெதுவாக மாறியது. பந்து சுழன்று திரும்புவதும் குறைந்தது.

இதனால் பேட்டிங் செய்வது எளிதாகிவிட்டது.

வெற்றிக்காக எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்து பார்த்தோம்.

ஆனால் முடிவு கிடைக்காதது ஏமாற்றம் அளிக்கிறது. இந்த போட்டியில் வெற்றி, தோல்வி எதுவும் எங்களுக்கு கிடைக்கவில்லை என்றாலும், டெஸ்ட் கிரிக்கெட்டுதான் வெற்றி பெற்றுள்ளது என்று சுப்மன் கில் கூறினார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA