Enter your Email Address to subscribe to our newsletters

அரக்கு , 29 ஆகஸ்ட் (ஹி.ச.)
ஆந்திரப் பிரதேச முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு இன்று (சனிக்கிழமை) அல்லூரி சீதாராமராஜு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
அரக்கு பள்ளத்தாக்கு மண்டலத்துக்கு உட்பட்ட கன்னெலே கிராமத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், பொதுமக்களுக்கு தரமான மருத்துவ சேவைகளை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள ‘சஞ்சீவனி’ திட்டத்தை அவர் தொடங்கி வைக்கிறார்.
சந்திரபாபு நாயுடு மதியம் 12 மணிக்கு உண்டவல்லியில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு கன்னெலே கிராமத்தை சென்றடைகிறார்.
அங்கிருந்து அருகிலுள்ள ராமகிருஷ்ணா நகர் பகுதிக்கு சென்று, அங்கு வசிக்கும் ஒரு பழங்குடியின குடும்பத்தினரை சந்தித்து அவர்களின் நலம் மற்றும் குறைகளை கேட்டறிகிறார்.
இதைத்தொடர்ந்து கன்னெலே கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் (பி.எச்.சி.) நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ‘சஞ்சீவனி’ திட்டத்தை முறைப்படி தொடங்கி வைக்கிறார்.
இந்த திட்டத்தின் மூலம் தொலைதூர மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மேம்பட்ட மருத்துவ சேவைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
பின்னர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘பிரஜாவேதிகை’ என்ற மக்கள் அரங்கில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு பொதுமக்களிடம் உரையாற்றுகிறார்.
தொடர்ந்து, மாநில அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்கள் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை பார்வையிடுகிறார்.
மேலும், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
முதல்-மந்திரியின் வருகையையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
நிகழ்ச்சிகள் நிறைவடைந்ததும் சந்திரபாபு நாயுடு ஹெலிகாப்டர் மூலம் மீண்டும் உண்டவல்லிக்கு புறப்பட்டுச் செல்கிறார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA