Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 29 ஆகஸ்ட் (ஹி.ச)
மதுரை காந்தி அருங்காட்சியக வளாகத்தில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு வாக்கத்தான் இன்று நடைபெற்றது.
இந்த வாக்கத்தான் நிகழ்வை தமிழக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் கோபிசன் மற்றும் முஸ்தபா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். ஏராளமான மாணவ, மாணவியர் மற்றும் சமூக ஆர்வலர்கள் இந்த விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார், மாணவர்களிடையே போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு மிகவும் அவசியம் என்று வலியுறுத்தினார்.
போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதே இந்த அரசின் லட்சியம் என்று அவர் கூறினார். இளைஞர்கள் தான் நாட்டின் எதிர்காலம் என்பதால், அவர்களை போதைப்பொருட்களில் இருந்து காப்பதில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும் மாணவர்களிடையே உரையாற்றிய அமைச்சர்,
இது உங்கள் அண்ணனின் அரசு. எங்கு தவறு நடந்தாலும் அதை சரி செய்வதற்காகவே இந்த அரசு உள்ளது. எனவே நீங்கள் யாருக்கும் அஞ்ச வேண்டியதில்லை.
பள்ளி, கல்லூரி வளாகங்களிலோ அல்லது வெளி இடங்களிலோ மாணவ, மாணவியருக்கு ஏதேனும் அசம்பாவிதம் அல்லது துன்புறுத்தல் நேரிட்டால், அதை தைரியமாக அரசின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும்.
அச்சப்படாமல் புகார் தெரிவிக்கலாம்.மாணவர்கள் அளிக்கும் ஒவ்வொரு புகாரின் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்
என்று அவர் உறுதி அளித்தார்.
Hindusthan Samachar / vidya.b