ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவதாக மிரட்டி ரூ.40 லட்சம் பறிப்பு - காவல் ஆய்வாளர் உள்ளிட்ட இருவரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
சென்னை, 29 ஆகஸ்ட் (ஹி.ச) ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையவர் என சேர்த்து விடுவதாகக் கூறி தொழிலதிபரிடம் ரூ.40 லட்சம் பணம் பறித்ததாக தொடரப்பட்ட வழக்கில், காவல் ஆய்வாளர் உள்ளிட்ட இருவரின் ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி
Armstrong.K


High court


சென்னை, 29 ஆகஸ்ட் (ஹி.ச)

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையவர் என சேர்த்து விடுவதாகக் கூறி தொழிலதிபரிடம் ரூ.40 லட்சம் பணம் பறித்ததாக தொடரப்பட்ட வழக்கில், காவல் ஆய்வாளர் உள்ளிட்ட இருவரின் ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தன்னை சேர்த்து விடுவதாக மிரட்டி, தொழிலதிபர் ஒருவரிடம் ரூ.40 லட்சம் பணம் பறித்ததாக காவல் ஆய்வாளர் உள்ளிட்ட இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், குற்றம்சாட்டப்பட்ட இருவரும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த ஜாமீன் மனுக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு தொடர்பான புலன் விசாரணை இன்னும் ஆரம்ப நிலையிலேயே இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், இந்த நிலையில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கினால் வழக்கின் புலன் விசாரணையில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் வாதிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வழக்கை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், புலன் விசாரணை ஆரம்ப நிலையில் இருப்பதால் தற்போதைய சூழ்நிலையில் ஜாமீன் வழங்க முடியாது எனக் கூறி, காவல் ஆய்வாளர் உள்ளிட்ட இருவரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Hindusthan Samachar / P YUVARAJ