இளைஞர்களின் திறமையும், அறிவும், உழைப்பும் இந்தியாவைப் பெருமைப்படுத்தும் - சி.பி.ராதாகிருஷ்ணன்
ஈரோடு, 29 ஆகஸ்ட் (ஹி.ச.) ஈரோடு அடுத்த பெருந்துறையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெறும் அறக்கட்டளை நிறுவனர் தின விழாவில் இந்திய குடியரசு துனைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கலந்துகொண்டு விழாவில் 100 கோடி ரூபாய்
CP Radhakrishnan


ஈரோடு, 29 ஆகஸ்ட் (ஹி.ச.)

ஈரோடு அடுத்த பெருந்துறையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெறும் அறக்கட்டளை நிறுவனர் தின விழாவில் இந்திய குடியரசு துனைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கலந்துகொண்டு விழாவில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான “அறிவுக்கூடம்” என்கின்ற ஆராய்ச்சிப் பூங்காவிற்கான கல்வெட்டினை இந்திய குடியரசு துணைத் தலைவர் திறந்து வைத்தார்.

இதனை தொடர்ந்து,துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் விழாவில் பேச்சு,

ஏன் இந்தியா NO 1 நாடக இருக்க கூடாது.

மற்ற நாடுகளில் கொரோனா தடுப்பூசி யூனிட்ட 5,000 முதல் 7,500 டாலர் வரை கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது. உலகில் எத்தனை பேரால் அந்த அளவிலான தொகையைச் செலுத்த முடியும்.

ஆனால், இந்த நாட்டின் மண்ணின் மகத்துவம் என்னவென்றால், இந்தியாவின் 144 கோடி மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட்டது.

அதுமட்டுமல்லாமல், மனிதநேயத்தின் அடிப்படையில், இந்தியா 104 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை இலவசமாக வழங்கியது.

இதுதான் மனிதநேயம். இதுதான் இந்த மண்ணின் பெருமை.

உலக மக்கள் அனைவரும் ஒன்றாக வாழ வேண்டும். உலகில் அமைதி நிலவ வேண்டும். அனைத்து நாடுகளும் ஒன்றாக வளர வேண்டும்.

ஏழை நாடுகளையும் நம்முடன் இணைத்துக்கொண்டு, அவர்களின் வளர்ச்சியைப் பறித்து நாம் வளரக்கூடாது. அவர்களையும் வளரச் செய்து, நாமும் வளர வேண்டும்.

இதுதான் இந்த அரசின் கொள்கை மட்டுமல்ல,இந்தத் தாய்நாட்டின் தத்துவம்.

அதனால்தான் இந்தியா உலகின் முதன்மையான நாடாக உருவாக வேண்டும் என்று நாம் விரும்புகிறோம்.

இன்று இங்கு மாணவர்களாக இருக்கும் இளைஞர்களின் திறமையும், அறிவும், உழைப்பும் நிச்சயமாக எதிர்காலத்தில் இந்தியாவைப் பெருமைப்படுத்தும்.

சுவாமி விவேகானந்தர் எப்போதும் ஒரு மிகப்பெரிய கருத்தைச் சொல்வார்.

வெற்றியைத் தொடர்ந்து, அடுத்த வெற்றியை நோக்கி நாம் பயணிப்போம். அதைத் தொடர்ந்து செய்ய வேண்டிய பணிகளை நம்மாலேயே தொடர்ந்து செய்வோம்.

நமக்காக உழைத்தவர்களையும், நம்மோடு பயணித்தவர்களையும் என்றும் மறக்காமல், அவர்களின் ஆதரவோடு இன்னும் பல சாதனைகளைப் படைப்போம் என்றார்.

Hindusthan Samachar / ANANDHAN