சனிக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு குற்றாலத்தில் குவிந்து வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம்
தென்காசி, 29 ஆகஸ்ட் (ஹி.ச.) தென்காசி மாவட்டத்திலுள்ள முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்றான குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலுமே சுற்றுலா பயணிகள் கூட்டம் என்பது அதிகரித்து காணப்பட்டு வருகிறது. குறிப்பாக, ஓணம் பண்டிகையானது நிறைவடைந்து ஏராளமா
Courtallam Falls


தென்காசி, 29 ஆகஸ்ட் (ஹி.ச.)

தென்காசி மாவட்டத்திலுள்ள முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்றான குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலுமே சுற்றுலா பயணிகள் கூட்டம் என்பது அதிகரித்து காணப்பட்டு வருகிறது.

குறிப்பாக, ஓணம் பண்டிகையானது நிறைவடைந்து ஏராளமான கேரள மக்கள் ஓணம் பண்டிகை விடுமுறை தினத்தை கொண்டாடுவதற்காக தமிழகத்தில் உள்ள சுற்றுலா தளங்களை நோக்கி வருகை தந்த வண்ணம் உள்ள நிலையில், கூடுதலாக இன்று சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும் தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலுமே சுற்றுலா பயணிகள் கூட்டம் என்பது அதிகரித்து காணப்பட்டு வருகிறது.

குறிப்பாக, குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலுமே தற்போது சுற்றுலா பயணிகள் கூட்டம் என்பது அதிகரித்து காணப்பட்டு வருவதால் அந்த பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு கண்காணிப்பு பணியும் தீவிரப்பட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN