சட்டமன்ற தேர்தல் சீட் வாங்கித் தருவதாக ரூ.4 கோடி மோசடி? -முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு கோரி மனு
சென்னை, 29 ஆகஸ்ட் (ஹி.ச) சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் சீட் வாங்கித் தருவதாகக் கூறி பெற்ற பணத்தை திருப்பித் தராமல் ஏமாற்றியதாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் ச
High court


சென்னை, 29 ஆகஸ்ட் (ஹி.ச)

சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் சீட் வாங்கித் தருவதாகக் கூறி பெற்ற பணத்தை திருப்பித் தராமல் ஏமாற்றியதாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆலங்குடி தொகுதி அதிமுக வேட்பாளர் தனவிமல் தாக்கல் செய்துள்ள இந்த மனு, சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

மனுவில், சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியான பின்னர் பெற்ற பணத்தை திருப்பித் தருவதாகக் கூறி சி.விஜயபாஸ்கர் ரூ.4.50 கோடி பெற்றதாகவும், அதில் ரூ.50 லட்சம் மட்டுமே திருப்பி வழங்கப்பட்டதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள ரூ.4 கோடியை திருப்பிக் கேட்டபோது, பணத்தை வழங்காமல் தொடர்ந்து இழுத்தடித்ததாகவும், மேலும் பணத்தை திரும்பக் கேட்டால் மிரட்டல் விடுத்ததாகவும் சி.விஜயபாஸ்கர் மீது தனவிமல் குற்றம்சாட்டியுள்ளார்.

இதையடுத்து, சம்பவம் தொடர்பாக சி.விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / P YUVARAJ