பழனி கோயில் நில விவகாரம்- தி.மு.க-வுக்கு நீதிமன்றம் குட்டு
தமிழ்நாடு, 29 ஆகஸ்ட் (ஹி.ச.) பழனி கோயில் நில விவகாரத்தில் அமைச்சர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து, சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டதாக தமிழக வெற்றி கழகம் குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக தவெக தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்
தவெக


தமிழ்நாடு, 29 ஆகஸ்ட் (ஹி.ச.)

பழனி கோயில் நில விவகாரத்தில் அமைச்சர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து, சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டதாக தமிழக வெற்றி கழகம் குற்றம்சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக தவெக தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

அமைச்சர் மற்றும் அவரது உறவினர்களுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கு நியாயமான ஆதாரங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், அமைச்சர் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு உண்மைகளைச் சரிபார்க்காமல் வெளியிடப்பட்ட தவறான தகவல் என நீதிமன்றத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டதாகவும், “Prima facie false information” என நீதிபதி பதிவு செய்துள்ளதாகவும் தவெக குறிப்பிட்டுள்ளது.

உண்மையைச் சரிபார்க்காமல் சமூக வலைதளத்தில் பதிவிட்ட தவெக கூறும் திமுக ஆதரவாளரிடம் வருத்தம் தெரிவித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் ஆதாரமற்ற அவதூறு பிரச்சாரம் மேற்கொண்ட திமுகவுக்கு இது சம்மட்டி அடி என்றும், இனியும் கட்டுக்கதைகளை கூறி திமுகவால் அரசியல் நடத்த முடியாது என்றும் தமிழக வெற்றி கழகம் விமர்சித்துள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P