Enter your Email Address to subscribe to our newsletters

ஈரோடு, 29 ஆகஸ்ட் (ஹி.ச.)
ஈரோடு அடுத்த பெருந்துறையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெறும் அறக்கட்டளை நிறுவனர் தின விழாவில் இந்திய குடியரசு துனைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கலந்து கொண்டு விழாவில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான “அறிவுக்கூடம்” என்கின்ற ஆராய்ச்சிப் பூங்காவிற்கான கல்வெட்டினை இந்திய குடியரசு துணைத் தலைவர் திறந்து வைத்தார்.
இவ்வாராய்ச்சி பூங்காவில் தொழில்நுட்ப வணிக காப்பக மையம், புத்தக ஆய்வகம் பல்வேறு பொறியியல்துறைகளுக்கான சிறப்பு மையங்கள் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி மையங்கள் அமைய உள்ளன.
மேலும் இவ்விழாவில் தமிழ்நாடு ஆளுநர் அர்லேக்கர் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம் சுந்தரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி தொடங்கும் முன்பு வந்தே பாரதம், அதனை தொடர்ந்து நாட்டுப்பண் பாடப்பட்ட நிலையில் மூன்றாவது ஆக தமிழ் தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது.
Hindusthan Samachar / ANANDHAN