உத்தராகண்டில் பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் படுகாயம்
உத்தராகண்ட், 29 ஆகஸ்ட் (ஹி.ச.) உத்தராகண்ட் மாநிலம் சாஹியா அருகே உள்ள லால்புல் பகுதியில் இன்று காலை கார் ஒன்று சுமார் 35 மீட்டர் ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் காயமடைந்தனர். இதில் இருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.
உத்தராகண்டில் பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில்  5 பேர் படுகாயம்


உத்தராகண்ட், 29 ஆகஸ்ட் (ஹி.ச.)

உத்தராகண்ட் மாநிலம் சாஹியா அருகே உள்ள லால்புல் பகுதியில் இன்று காலை கார் ஒன்று சுமார் 35 மீட்டர் ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் காயமடைந்தனர்.

இதில் இருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இந்த விபத்து குறித்து இன்று அதிகாலை அவசர உதவி எண்ணுக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில், சக்ரதாவைச் சேர்ந்த மாநில பேரிடர் மீட்புப் படையினர், உதவி ஆய்வாளர் ஜஸ்பால் சிங் தலைமையில் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அங்கு பள்ளத்தாக்கின் அடிப்பகுதியில் விபத்துக்குள்ளான காரை அவர்கள் கண்டறிந்தனர்.

அந்த காரில் 3 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் என மொத்தம் 5 பேர் பயணித்துள்ளனர். இதில் இருவருக்கு பலத்த காயமும், மற்ற மூவருக்கு லேசான காயமும் ஏற்பட்டுள்ளது.

உள்ளூர் காவல்துறையினருடன் இணைந்து மாநில பேரிடர் மீட்புப் படை வீரர்கள் பள்ளத்தாக்கில் இறங்கி மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, காயமடைந்த 5 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Hindusthan Samachar / vidya.b