உத்தரப்பிரதேசத்தில் ஹெச்1என்1 பரவல் - சுகாதாரத்துறை அமைச்சர் ஆலோசனை
லக்னோ, 29 ஆகஸ்ட் (ஹி.ச.) உத்தரப்மாநிலத்தில் ஹெச்1என்1 (H1N1) காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து, உத்தரப்பிரதேச துணை முதல்வரும் சுகாதாரத்துறை அமைச்சருமான பிரஜேஷ் பதக் இன்று உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். லக்னோவில் உள்ள சு
H1N1 Spread in Uttar Pradesh


லக்னோ, 29 ஆகஸ்ட் (ஹி.ச.)

உத்தரப்மாநிலத்தில் ஹெச்1என்1 (H1N1) காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து, உத்தரப்பிரதேச துணை முதல்வரும் சுகாதாரத்துறை அமைச்சருமான பிரஜேஷ் பதக் இன்று உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார்.

லக்னோவில் உள்ள சுகாதார சேவைகள் இயக்குநரக தலைமையகத்தில் காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், காய்ச்சல் நோயாளிகளைக் கண்காணிப்பது மற்றும் தேவையான மருந்துகள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்வது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பதக்,

மேற்கு உத்தரப்பிரதேசம் மற்றும் லக்னோவில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருப்பதால் அப்பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மூன்றாம் நிலை சிகிச்சைக்கான அனுமதிகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டதுடன், மாநிலம் முழுவதும் உயர் எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் உறுதிப்படுத்தினார்.

மருந்துகள் போதுமான அளவில் இருப்பு உள்ளதாக பொதுமக்களுக்கு உறுதியளித்த சுகாதார அமைச்சர், பீதி அடைய வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும் இந்த பருவகால காய்ச்சலை எதிர்கொள்ள மாநிலம் முழுவதும் எச்சரிக்கையுடன் வைத்துள்ளோம், எந்த சூழ்நிலையையும் சமாளிக்க அரசு தயாராக உள்ளது.

என்று வலியுறுத்தினார். மேலும், இந்த காலகட்டத்தில் அதிகாரிகள் விடுப்பு எடுக்க அரசின் ஒப்புதல் பெற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

உயிரிழப்பு குறித்து பேசிய அமைச்சர் பதக், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது மிகக் குறைந்த ரத்த அழுத்தத்துடன் இருந்த ஒரு நோயாளி உயிரிழந்ததாக தெரிவித்தார்.

பல்ராம்பூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அந்த நோயாளி இதய செயலிழப்பு காரணமாக உயிரிழந்ததாக அவர் கூறினார்.

Hindusthan Samachar / vidya.b