மதுராந்தகம் அருகே கார் டயர் வெடித்து பயங்கர விபத்து - 3 மாணவர்கள் உயிரிழப்பு, 4 பேர் படுகாயம்
செங்கல்பட்டு, 29 ஆகஸ்ட் (ஹி.ச) செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே இன்று அதிகாலை புதுச்சேரியிலிருந்து கார் ஒன்றில் ஏழு மாணவர்கள் சென்னை திரும்பிக் கொண்டிருந்தனர். மதுராந்தகம் அருகே வந்தபோது கார் டயர் வெடித்தால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை
Horrific accident near Maduranthakam caused by a burst car tyre


செங்கல்பட்டு, 29 ஆகஸ்ட் (ஹி.ச)

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே இன்று அதிகாலை புதுச்சேரியிலிருந்து கார் ஒன்றில் ஏழு மாணவர்கள் சென்னை திரும்பிக் கொண்டிருந்தனர்.

மதுராந்தகம் அருகே வந்தபோது கார் டயர் வெடித்தால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை முழுமையாக இழந்த கார், சாலையில் தாறுமாறாக ஓடி தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பல்லாவரத்தைச் சேர்ந்த தனியார் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த ஹரி, தீபக் மற்றும் ராஜ் பிரசாத் ஆகிய மூன்று மாணவர்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த நான்கு மாணவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு உடனடியாக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

படுகாயமடைந்த மாணவர்களில் ராம்பிரசாத் மற்றும் லோகேஸ்வரன் ஆகிய இருவர் எஸ்.ஆர்.எம் மருத்துவமனையிலும், ஹரிகிருஷ்ணன் மற்றும் அனீஸ்வரன் ஆகிய இருவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து குறித்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மதுராந்தகம் போலீசார், உடனடியாக மீட்புப் பணிகளை மேற்கொண்டு போக்குவரத்தைச் சீர்செய்தனர்.

மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி சுற்றுலா முடிந்து மகிழ்ச்சியுடன் வீடு திரும்பிய கல்லூரி மாணவர்கள் விபத்தில் சிக்கிய சம்பவம் அவர்தம் குடும்பத்தாரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b