Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 29 ஆகஸ்ட் (ஹி.ச.)
காரைக்குடி ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பொறியியல் பணிகள் காரணமாக, இன்று (ஆகஸ்ட் 29) திருச்சி–காரைக்குடி மற்றும் காரைக்குடி–திருச்சி இடையே இயக்கப்படும் 2 பயணிகள் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ரயில் எண் 56815 திருச்சிராப்பள்ளி சந்திப்பு–காரைக்குடி சந்திப்பு பயணிகள் ரயில், இன்று காலை 10.30 மணிக்கு திருச்சிராப்பள்ளியில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக, 2 மணி நேரம் தாமதமாக மதியம் 12.30 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ரயில் எண் 56816 காரைக்குடி சந்திப்பு–திருச்சிராப்பள்ளி பயணிகள் ரயிலின், காரைக்குடி முதல் செட்டிநாடு வரையிலான சேவை இன்று பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனால், இந்த ரயில் காரைக்குடியில் இருந்து புறப்படாமல், செட்டிநாடு ரயில் நிலையத்தில் இருந்து திருச்சிராப்பள்ளி நோக்கி இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்குடி ரயில் நிலையத்தில் நடைபெறும் பொறியியல் பணிகள் காரணமாக இந்த தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் தங்களது பயணத்தை அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ