கர்நாடக அணைகளில் இருந்து காவிரி நீர் அதிகரிப்பு
பெங்களூரு , 29 ஆகஸ்ட் (ஹி.ச.) காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கர்நாடகாவில் உள்ள முக்கிய அணைகளான கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வரு
A


பெங்களூரு , 29 ஆகஸ்ட் (ஹி.ச.)

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கர்நாடகாவில் உள்ள முக்கிய அணைகளான கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதையடுத்து, அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 2,498 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 4,812 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 6,100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 6,600 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால், கர்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டை நோக்கி காவிரியில் மொத்தம் வினாடிக்கு 11,321 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

காவிரியில் நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், தமிழக காவிரி பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA