கோழிக்கோடு அருகே மின்கம்பத்தில் கார் மோதி விபத்து - செக்யூரிட்டி நூலிழையில் உயிர் தப்பினார்
கோழிக்கோடு , 29 ஆகஸ்ட் (ஹி.ச.) கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் பெராம்ப்ரா-குட்டியாடி மாநில நெடுஞ்சாலையில் உள்ள கடியாங்காடு பகுதியில், கட்டுப்பாட்டை இழந்த கார் மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், சாலையோரத்தில் அமர்ந்திருந்த செக்யூரிட்
A


கோழிக்கோடு , 29 ஆகஸ்ட் (ஹி.ச.)

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் பெராம்ப்ரா-குட்டியாடி மாநில நெடுஞ்சாலையில் உள்ள கடியாங்காடு பகுதியில், கட்டுப்பாட்டை இழந்த கார் மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், சாலையோரத்தில் அமர்ந்திருந்த செக்யூரிட்டி ஒருவர் நூலிழையில் உயிர் தப்பினார்.

கடியாங்காடு பகுதியில் ‘காப் ரெஸ்டோ’ என்ற உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ரவீந்திரன் என்பவர் செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார்.

வழக்கம்போல் அவர் உணவகத்தின் வாசல் அருகே உள்ள மின்கம்பத்தின் பக்கத்தில் நாற்காலி போட்டு அமர்ந்திருந்தார்.

அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த வெள்ளை நிற கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.

சாலையோரம் பாய்ந்த கார், அங்கு அமர்ந்திருந்த ரவீந்திரனை நோக்கி வேகமாக சென்றது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர், நாற்காலியில் இருந்து எழ முயன்றார்.

அதற்குள் கார், அவர் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகே இருந்த சிமெண்டு மின்கம்பத்தில் பயங்கரமாக மோதியது.

மோதிய வேகத்தில் மின்கம்பம் இரண்டாக உடைந்தது.

மின்கம்பம் காரின் வேகத்தை தடுத்து நிறுத்தியதால், கார் ரவீந்திரன் மீது நேரடியாக மோதுவது தவிர்க்கப்பட்டது.

எனினும், விபத்தின் தாக்கத்தால் ஏற்பட்ட அதிர்வில் ரவீந்திரன் நாற்காலியுடன் பின்னோக்கி தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. அதிர்ஷ்டவசமாக அவர் பெரும் காயங்கள் இன்றி உயிர் தப்பினார்.

இந்த விபத்தில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது.

காரில் இருந்தவர்களுக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மின்கம்பம் தடையாக அமைந்ததால் செக்யூரிட்டி ரவீந்திரன் உயிர் தப்பிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA