Enter your Email Address to subscribe to our newsletters

திருவனந்தபுரம், 29 ஆகஸ்ட் (ஹி.ச.)
திருவனந்தபுரத்தில் வெள்ளிக்கிழமை சமூக சீர்திருத்தவாதி ஸ்ரீ நாராயண குருவின் பிறந்தநாள் விழாவையொட்டி செம்பழந்தியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதல்வர் சதீசன் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, ஒரு குழுவினர் அவரது வாகன அணிவகுப்பை வழிமறித்தனர். அந்தக் குழுவினர் செந்தி பகுதியில் ஸ்ரீ நாராயண குருவின் பிறந்தநாள் விழாவை ஏற்பாடு செய்திருந்ததுடன், அந்த நிகழ்ச்சியிலும் முதல்வர் சதீசன் பங்கேற்க வேண்டும் என வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
சுமார் 30 விநாடிகளுக்குப் பிறகு வாகனத்தில் இருந்து இறங்கிய முதல்வர் சதீசன், திருவனந்தபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி (DCC) நிர்வாகியான அனில் குமார் என்ற செந்தி அனில் குமார் என்பவரிடம் பேசினார்.
அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து சில நிமிடங்களில் முதல்வர் மீண்டும் தனது வாகனத்தில் ஏறி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
இதுகுறித்து முதல்வர் சதீசன் அலுவலகம் தெரிவிக்கையில், செந்தியில் நடைபெற்ற நிகழ்ச்சி முதல்வரின் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி நிரலில் இடம்பெறவில்லை என விளக்கம் அளித்துள்ளது.
இந்நிலையில், அரசு அதிகாரியின் பணியைத் தடுக்க வாகனத்தை வழிமறித்தல், சட்டவிரோதமாகத் தடுத்தல், குற்றவியல் மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின்படி அனில் குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.
கேரள முதல்வர் வி.டி. சதீசனின் வாகன அணிவகுப்பை வழிமறித்து, அவர் செல்லவிருந்த நிகழ்ச்சிக்கு தங்களது நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுத்த காங்கிரஸ் நிர்வாகி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P