Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 29 ஆகஸ்ட் (ஹி.ச.)
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சற்று அதிகரித்துள்ளது. நேற்று வினாடிக்கு 6,571 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று வினாடிக்கு 6,702 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டத்தில் தொடர்ந்து மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது.
தற்போதைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 89.95 அடியாக உள்ளது. அணையில் மொத்தம் 52.59 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீர்வரத்தை நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் குடிநீர் தேவைக்காக தொடர்ந்து வினாடிக்கு 2,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், நீர்மட்டமும் படிப்படியாக உயர வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை மற்றும் அங்கிருந்து வரும் நீரின் அளவை பொறுத்து, மேட்டூர் அணையின் நீர்வரத்தில் வரும் நாட்களில் மாற்றம் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam