Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 29 ஆகஸ்ட் (ஹி.ச.)
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப் பேரிடரில் சிக்கியிருந்த 21 தமிழர்கள் உட்பட 84 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
வடக்கு எல்லைப் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக நேபாளத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதில் அங்கு யாத்திரை மற்றும் சுற்றுலாவுக்காக சென்றிருந்த ஏராளமான இந்தியர்கள் சிக்கிக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, இதுவரை 84 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் சீனாவில் சிக்கியிருந்த இந்தியர்களில் 149 பேர் நேபாளம் வழியாக பாதுகாப்பாக இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். மேலும் சீனாவில் உள்ள சுமார் 400 இந்தியர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்களை தாயகம் அழைத்து வருவதற்கு இந்திய தூதரகம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் வெள்ளப் பாதிப்பு பகுதிகளில் உள்ள சுமார் 320 பேரை இதுவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், அவர்களை கண்டுபிடிக்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b