Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 29 ஆகஸ்ட் (ஹி.ச.)
திண்டுக்கல் மாவட்டம்,
பழனி நகரில் உள்ள ஏடிஎம்களில் பொருத்தப்பட்டிருந்த பேட்டரிகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக, ஸ்டேட் பேங்க் மேலாளர் பிரேம்குமார் பழனி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து பழனி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்ட ஏடிஎம்களில் பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின் அடிப்படையில் ஜேம்ஸ், பிரபு மற்றும் கார்த்திக் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
மேலும், அவர்களிடமிருந்து 35 பேட்டரிகள் மீட்கப்பட்டதுடன், திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட டாடா ஏஸ் வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் தொடர்புடைய சசிகுமார் என்பவர் தலைமறைவாக உள்ளதாகவும், அவரை போலீசார் தீவிரமாக தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழனி நகரில் அடுத்தடுத்து 6 ஏடிஎம்களில் பேட்டரிகள் திருடப்பட்ட சம்பவத்தில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு 3 பேரை கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN