நியாய விலைக் கடைகளில் இன்று eKYC சிறப்பு முகாம் – 96.21% பணிகள் நிறைவு
தமிழ்நாடு, 29 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் இன்று (ஆகஸ்ட் 29) குடும்ப அட்டைதாரர்களுக்கான eKYC பதிவு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த முகாமில், இதுவரை eKYC பதி
ரேஷன் கடை


தமிழ்நாடு, 29 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் இன்று

(ஆகஸ்ட் 29) குடும்ப அட்டைதாரர்களுக்கான eKYC பதிவு சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த முகாமில், இதுவரை eKYC பதிவு செய்யாமல் விடுபட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள் பங்கேற்று தங்களது கைரேகைப் பதிவை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-ன் அடிப்படையில், முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளில் இடம்பெற்றுள்ள பயனாளர்களின் ஆதார் விவரங்களை சரிபார்க்கும் வகையில் eKYC நடைமுறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள பயனாளர்களின் கைரேகை அடிப்படையிலான சரிபார்ப்பு கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் முதல் நடைபெற்று வருகிறது.

தற்போதைய நிலவரப்படி, முன்னுரிமை குடும்ப அட்டைகளில் 96.21 சதவீத eKYC பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

மீதமுள்ள பயனாளர்களின் பதிவையும் 100 சதவீதம் நிறைவு செய்யும் நோக்கில் இந்த சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

எனவே, குடும்ப அட்டையில் பெயர் இடம்பெற்றுள்ளவர்களில் இதுவரை கைரேகை பதிவு செய்யாதவர்கள், இன்று தங்களது நியாய விலைக் கடைக்குச் சென்று eKYC பதிவை முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களின் eKYC பதிவு விடுபட்டிருந்தால், அவர்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam