Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 29 ஆகஸ்ட் (ஹி.ச)
ஆவணி மாத சுபமுகூர்த்த தினமான ஆகஸ்ட் 31-ம் தேதி பத்திரப்பதிவுகள் வழக்கத்தை விட அதிகளவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதால், அன்றைய தினம் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு வில்லைகள் வழங்கப்படும் என பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக பதிவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்களின் வசதியை கருத்தில் கொண்டும், பத்திரப்பதிவு பணிகளை சுமுகமாக நடத்தவும் இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களில் வழக்கமாக நாளொன்றுக்கு 100 முன்பதிவு வில்லைகள் வழங்கப்படும் நிலையில், ஆகஸ்ட் 31-ம் தேதி அன்று 150 வில்லைகள் வழங்கப்படும். அதேபோல், இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களில் வழக்கமான 200 வில்லைகளுக்கு பதிலாக 300 வில்லைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாநிலம் முழுவதும் அதிக அளவில் பதிவுகள் நடைபெறும் 100 முக்கிய சார்பதிவாளர் அலுவலகங்களிலும் இந்த கூடுதல் டோக்கன் முறை அமல்படுத்தப்பட உள்ளது. அங்கு வழக்கமாக வழங்கப்படும் 100 சாதாரண வில்லைகளுக்கு பதிலாக 150 வில்லைகள் வழங்கப்படும்.
இதுமட்டுமின்றி, ஏற்கனவே தினமும் வழங்கப்பட்டு வரும் 12 தட்கல் வில்லைகளுடன் கூடுதலாக 4 தட்கல் வில்லைகள் சேர்த்து மொத்தம் 16 தட்கல் வில்லைகள் ஒதுக்கீடு செய்யவும் பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b