Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 29 ஆகஸ்ட் (ஹி.ச.)
1984 சீக்கியர் கலவர வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமார் உயிரிழந்த விவகாரம் தொடர்பான சர்ச்சை, தற்போது பாஜக எம்.பி.க்களையும் சுற்றியுள்ளது.
80 வயதான சஜ்ஜன் குமார், 1984-ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரத்தின்போது 5 பேரை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக இந்த மாத தொடக்கத்தில் உயிரிழந்தார். உயர் ரத்த அழுத்தம் மற்றும் பார்கின்சன் நோய் உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகளால் அவர் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
சஜ்ஜன் குமாரின் மரணத்துக்கு ஹரியானா காங்கிரஸ் தலைவர்கள் சிலர் இரங்கல் தெரிவித்தனர். குறிப்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் தீபேந்தர் ஹூடா, சஜ்ஜன் குமாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததுடன், அவரைப் பாராட்டும் வகையில் கருத்து தெரிவித்ததாக கட்சிக்குள்ளேயே கடும் விமர்சனம் எழுந்தது.
பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், 1984 கலவர வழக்கில் சஜ்ஜன் குமாரின் பின்னணி காரணமாக ஹூடாவுக்கு எதிர்ப்பு அதிகரித்தது.
இந்த நிலையில், தற்போது பாஜகவைச் சேர்ந்த 3 எம்.பி.க்கள் சஜ்ஜன் குமாரின் வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, அவர்களுக்கும் அரசியல் ரீதியாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
காங்கிரஸ் தலைவர்கள் சஜ்ஜன் குமாரின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்ததற்காக விமர்சிக்கப்பட்ட நிலையில், தற்போது எதிர்க்கட்சியான பாஜக எம்.பி.க்களும் அவரது வீட்டுக்குச் சென்ற விவகாரம் அரசியல் வட்டாரத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இதை தொடர்பாக சம்பந்தப்பட்ட மூன்று எம்பிக்கள் இடமும் விளக்கம் கேட்டு பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P