Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 29 ஆகஸ்ட் (ஹி.ச.)
சேலம் மாநகராட்சியின் துணை மேயர் சாரதா தேவியின் இருக்கை மேடையிலிருந்து மாற்றப்பட்டு, அவர் இடைநீக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்துக்கு திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சசிகாந்த் செந்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
சேலம் மாநகராட்சி துணை மேயர் சாரதா தேவியின் இருக்கையை மேடையிலிருந்து மாற்றியதுடன், அவரை இடைநீக்கம் செய்திருப்பது கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார்.
அரசியல் வன்மத்தை மனதில் வைத்து அதிகாரத்தைப் பயன்படுத்தி இதுபோன்ற இழிவான செயல்களில் ஈடுபடுவது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் செயலுக்கு காரணமான சேலம் மாநகராட்சி மேயர் மீது உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ள சசிகாந்த் செந்தில், சாரதா தேவிக்கு உரிய மரியாதையும், அவரது பதவிக்குரிய உரிமைகளும் உடனடியாக உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், “ஒரு பெண் பிரதிநிதியை அதிகாரத்தைப் பயன்படுத்தி அவமதிப்பதும், ஒடுக்குவதும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என சசிகாந்த் செந்தில் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P