தேசிய விளையாட்டு தினம்-விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் வாழ்த்து
தமிழ்நாடு, 29 ஆகஸ்ட் (ஹி.ச.) இந்திய ஹாக்கி அணியின் தலைசிறந்த வீரரும், உலகளவில் அபார சாதனைகள் படைத்தவருமான மேஜர் தியான் சந்த் பிறந்தநாளை முன்னிட்டு, தேசிய விளையாட்டு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனை
விஜய்


தமிழ்நாடு, 29 ஆகஸ்ட் (ஹி.ச.)

இந்திய ஹாக்கி அணியின் தலைசிறந்த வீரரும், உலகளவில் அபார சாதனைகள் படைத்தவருமான மேஜர் தியான் சந்த் பிறந்தநாளை முன்னிட்டு, தேசிய விளையாட்டு தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அனைவருக்கும் முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது ம

னமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவரது எக்ஸ் பதிவில் கூறியதாவது;

விளையாட்டு என்பது பதக்கங்களை வெல்வதற்காக மட்டுமல்லாமல், ஒழுக்கம், விடாமுயற்சி, தன்னம்பிக்கை, தலைமைப் பண்பு மற்றும் குழு உணர்வு ஆகியவற்றை வளர்த்துக் கொள்வதற்கான சிறந்த களமாகவும் திகழ்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆரோக்கியமான, மகிழ்ச்சியான மற்றும் நிறைவான வாழ்க்கைக்கு உடல்தகுதி மிகவும் அவசியம் என்றும், இளைய தலைமுறையினர் விளையாட்டையும் உடற்பயிற்சியையும் அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாக வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வெற்றிகளைக் குவித்து, இந்தியாவின் மூவர்ணக் கொடியை மேலும் உயரத்தில் பறக்கச் செய்ய வேண்டும் எனவும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விளையாட்டில் வளர்வோம்! வெற்றியில் மிளிர்வோம்!” என முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது வாழ்த்து பதிவில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam