Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 29 ஆகஸ்ட் (ஹி.ச)
கடந்த ஆகஸ்ட் 24 அன்று முதலமைச்சர் ந.ரங்கசாமி ₹14,300 கோடிக்கான வரியில்லா பட்ஜெட்டைத் தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, பேரவையில் பட்ஜெட் மீதான பொது விவாதம் கடந்த சில தினங்களாக நடைபெற்று வந்தது.
புதுவை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்ட தொடரின் 5வது நாள் கூட்டத்தொடரான இன்று பட்ஜெட் மீதான விவாதம் நிறைவடைந்த பின்பு இறுதியாக முதல்வர் ரங்கசாமி பதிலளித்து பேசினார்.
சட்டப்பேரவையில் முதல்வர் பேசியதாவது:
மத்திய அரசின் ஒத்துழைப்போடு தொடர்ந்து மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும். பிரதமர் உதவியோடு பல திட்டங்கள் செயல்படுத்துகிறோம். இருப்பினும் புதுவைக்கு கூடுதல் நிதி தேவைப்படுகிறது.
புதுவைக்கு கடந்த காலங்களில் 70 சதவீத நிதி மத்திய அரசு அளித்தது. தற்போது 70 சதவீதம் மாநிலத்தின் சொந்த வருவாயாக உள்ளது, 30 சதவீதத்திற்கும் குறைவான நிதியே மத்திய் அரசு தருகிறது.
இருப்பினும், வரி சுமை இல்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்கிறோம், புதுவை பட்ஜெட் நிதி சம்பளம், ஓய்வூதியம், கடன் திருப்பிச் செலுத்துவதற்கு அதிகமாக செலவிடப்படுகிறது. மத்திய அரசு கடனை தள்ளுபடி செய்தால் கூடுதல் நிதி கிடைக்கும். கடனை தள்ளுபடி செய்ய மத்திய அரசை வலியுறுத்துவோாம்.
சிறப்பு பொருளாதார மண்டலங்களை விரைவில் கொண்டு வந்து வேலை வாய்ப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கரசூரில் இந்த ஆண்டே தொழில்பேட்டையையும், மேட்டுப்பாளையத்தில் ஐடி பார்க்கும் கொண்டு வரப்படும்.
ஆதிதிராவிட மாணவர்களுக்கு வழங்குவது போல் மீனவ சமுதாய மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை முழுமையாக வழங்கப்படும். கேஸ் சிலிண்டர மானியம் ரூ 50 உயர்த்தப்படும்.
இதன்படி, சிகப்பு ரேஷன் கார்டுக்கு ரூ.50 மானியம் உயர்த்தப்பட்டு ரூ.350 ஆகவும், மஞ்சள் கார்டுக்கு ரூ.50 உயர்த்தப்பட்டு ரூ.200 ஆகவும் வழங்கப்படும்.
கலால்துறையில் மாற்றங்கள் கொண்டுவந்து மாநில வருவாயை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். டெல்லி போல அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்தை மத்திய அரசே ஏற்க வலியுறுத்தப்படும்.
இவ்வாறு முதல்வர் ரங்கசாமி கூறினாார்
Hindusthan Samachar / vidya.b