தெலங்கானாவில் அங்கன்வாடி பணியிடங்கள் 15,982 நிரப்பப்படும் இன்டர்மீடியட் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
ஐதராபாத் , 29 ஆகஸ்ட் (ஹி.ச.) தெலங்கானா மாநிலத்தில் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 15,982 பணியிடங்களை நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து முதல்வர் ரேவந்த் ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில். இந்தப் பணியிடங்களுக்கான நியமன நடவடிக்கைகளை
A


ஐதராபாத் , 29 ஆகஸ்ட் (ஹி.ச.)

தெலங்கானா மாநிலத்தில் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 15,982 பணியிடங்களை நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து முதல்வர் ரேவந்த் ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில்.

இந்தப் பணியிடங்களுக்கான நியமன நடவடிக்கைகளை விரைவுபடுத்தி, செப்டம்பர் மாதத்துக்குள் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, மாவட்ட அளவில் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் நடைபெற உள்ளன.

மண்டலம்-1 பகுதியில் 1,853 அங்கன்வாடி ஆசிரியர் பணியிடங்களும், 7,737 உதவியாளர் (ஆயா) பணியிடங்களும் உள்ளன.

மண்டலம்-2 பகுதியில் 1,247 ஆசிரியர் பணியிடங்களும், 5,145 உதவியாளர் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இன்டர்மீடியட் (12-ம் வகுப்பு) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தகுதியானவர்களை நேர்காணல் உள்ளிட்ட தேர்வு முறையின் அடிப்படையில் தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

தேர்வில், விண்ணப்பதாரர்கள் இன்டர்மீடியட்டில் பெற்ற மதிப்பெண்களுக்கு 70 சதவீத வெயிட்டேஜ் வழங்கப்படும்.

நேர்காணலுக்கு 10 சதவீத மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், விதவைகள், அனாதைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பிரிவுகளின் கீழ் கூடுதல் வெயிட்டேஜ் வழங்கப்பட உள்ளது.

அதன்படி, விதவைகளுக்கு 5 சதவீதமும், அனாதைகளுக்கு 10 சதவீதமும், மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீதமும் வெயிட்டேஜ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கை மூலம் தெலங்கானா மாநிலத்தில் ஆயிரக்கணக்கான பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

விண்ணப்ப தேதி, வயது வரம்பு, மாவட்ட வாரியான பணியிட விவரங்கள் உள்ளிட்ட முழுமையான தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA