சாலை விபத்தில் படுகாயமடைந்த போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
சென்னை, 29 ஆகஸ்ட் (ஹி.ச.) கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவை முன்னிட்டு மெரினா காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் விரிவான போக்குவரத்துப் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த சிறப்புப் பாதுகாப்புப் பணியில் ஈட
சாலை விபத்தில் படுகாயமடைந்த போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு


சென்னை, 29 ஆகஸ்ட் (ஹி.ச.)

கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவை முன்னிட்டு மெரினா காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் விரிவான போக்குவரத்துப் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த சிறப்புப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் சீனிவாசன் மீது எதிர்பாராத விதமாக கார் மோதியது.

இந்த விபத்தில் அவர் சிக்கி பலத்த காயமடைந்தார்.

விபத்தைத் தொடர்ந்து உடனடியாக மீட்கப்பட்ட அவர், தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கு மருத்துவர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது.

அவரது மறைவுச் செய்தி காவல் துறையினர் மற்றும் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த காவல் அதிகாரியின் குடும்பத்திற்கு உயர் அதிகாரிகள் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b