உலர் துறைமுகம் திட்டத்தில் முதலமைச்சர் விஜய் ஆர்வம் காட்டுகிறார் - துரை வைகோ
திருச்சி, 29 ஆகஸ்ட் (ஹி.ச.) திருச்சிராப்பள்ளி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், உலர் துறைமுகம் திட்டத்தை திருச்சியில் செயல்படுத்து வதற்காக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள
Durai Vaiko


திருச்சி, 29 ஆகஸ்ட் (ஹி.ச.)

திருச்சிராப்பள்ளி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

அப்போது அவர் பேசுகையில்,

உலர் துறைமுகம் திட்டத்தை திருச்சியில் செயல்படுத்து வதற்காக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை சந்தித்து ஐந்து முறை மனு அளித்து, மத்திய அமைச்சர்களை சந்தித்து மனுக்களை வழங்கி உள்ளேன்.

தமிழநாட்டை சிவப்பு மண்டலமாக வகைப்படுத்தி அறிவித்துள்ளதாகவும் அதனால் இந்த திட்டத்தை செயல்படுத்தமுடியாது என சிறப்பு திட்டம் வாயிலாக இதனை செயல்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இது போன்ற இடையூறுகள் இருக்கக் கூடாது என வலியுறுத்தி கேட்டுக்கொண்டதுடன், அதன் அடிப்படையில் நிர்மலா சீதாராமன் அவர்கள் இதனை செயல்படுத்த உறுதியளித்திருந்தார்.

முதலமைச்சரிடம் இது தொடர்பாக கோரிக்கை வைத்திருந்தேன், மேலும் மத்திய அமைச்சகத்திடம் இந்த திட்டத்தை செயல்படுத்த ஆரம்பமாக உள்ளதாக கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளனர்.

ஒன்றரை ஆண்டுக்கு முன்பு இந்த திட்டத்தை செயல்படுத்த கொண்டு வந்தேன், அப்போதே மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பாராட்டினார்கள், அதனால் தான் இந்த திட்டத்தை செயல்படுத்த நான் ஆர்வம் காட்டினேன்

முந்தைய திமுக அரசு இதனை செயல்படுத்த ஆர்வம் காட்டவில்லை,

ஆனால் ஜோசப் விஜய் அவர்கள் இதனை செயல்படுத்த ஆர்வம்காட்டுகிறார்.

மத்திய மாநில அரசுகள் ஆர்வம் காட்டியதால், டாக்குமென்டேஷன் மற்றும் பேக்கிங் எல்லாம் சீக்கிரம் முடியும், நேரடியாக 12500 க்கும் மேற்பட்ட ஒரு நேரடி மற்றும் மறைமுகமாக மற்றும் இலட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள் உருவாகும்

இந்தத் திட்ட முன்வடிவை தமிழக அரசு வழங்க கேட்டுள்ளது, அதன் பின்னர் உடனடியாக செயல்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டார்.

Hindusthan Samachar / ANANDHAN