Enter your Email Address to subscribe to our newsletters

பீகார், 29 ஆகஸ்ட் (ஹி.ச.)
போட் கோஷி ஆற்றில் ஏற்பட்ட பெரும் நீர்ப்பெருக்கு காரணமாக நேபாளத்தில் திடீர் வெள்ளம் ஏற்பட்டதை அடுத்து பீகாரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேபாளத்தை ஒட்டியுள்ள மாநிலங்களில், குறிப்பாக இந்திய அதிகாரிகள் நேபாளத்துடன் இணைக்கப்பட்ட நதி அமைப்புகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய காணாமல் போன இந்தியர்களை கண்டறியும் முயற்சிகளில் அரசு அமைப்புகளும் தூதரக வழிகளும் ஈடுபட்டுள்ளன.
மேலும் நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு தரும் திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து, கீழ்பகுதிக்கு செல்லும் நீரோட்டம் குறித்த அச்சம் தணிந்துள்ளது.
பீகாரையும் நேபாளத்தையும் இணைக்கும் வால்மீகிநகர் அணையில் நேற்று நீர் வெளியேற்றத்தில் ஏற்ற இறக்கம் காணப்பட்டது. வெள்ளிக்கிழமை அன்று நீர் வெளியேற்றம் 1,02,100 கன அடியை எட்டியிருந்தது.
இந்த நிலையில் மேற்கு சம்பாரணில் உள்ள கண்டக் அணையில் நீர்மட்டம் இன்று காலை 97,500 கன அடியாக குறைந்து இயல்பு நிலையில் இருப்பதாக பதிவாகியுள்ளது.
நேபாளத்தில் தொடரும் வெள்ள பாதிப்பு மற்றும் பீகாரின் கீழ்ப்பகுதிகளில் அதன் தாக்கம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர்.
கண்டக் அணையை பார்வையிட்ட பீகார் அமைச்சர் நந்த் கிஷோர் ராம், எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ள மாநில அரசு தயாராக இருப்பதாக கூறினார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில்,
கண்டக் அணையில் அபரிமிதமான அழுத்தம் இருப்பது கண்டறியப்பட்டது பணியில் உள்ள அனைத்து அதிகாரிகளும் முழு விழிப்புடனும் தயார் நிலையிலும் இருக்குமாறு உத்தரவிட்டுள்ளேன்.
அரசு முழுமையாக தயாராக உள்ளது. நிர்வாகம் மிகுந்த தீவிரத்துடனும் அர்ப்பணிப்புடனும் செயல்பட்டு வருகிறது.
என்று அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / vidya.b