இப்படி ஒரு வீரர் கிடைத்திருப்பது இந்தியாவின் அதிர்ஷ்டம் – தேவ்தத் படிக்கல்லை புகழ்ந்த கெவின் பீட்டர்சன்
மும்பை , 29 ஆகஸ்ட் (ஹி.ச.) இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் இளம் வீரர் தேவ்தத் படிக்கல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர்நாயகன் விருதை வென்றார். அவரது அபாரமான செயல்பாட்டை இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவி
A


மும்பை , 29 ஆகஸ்ட் (ஹி.ச.)

இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் இளம் வீரர் தேவ்தத் படிக்கல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர்நாயகன் விருதை வென்றார். அவரது அபாரமான செயல்பாட்டை இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் வெகுவாக பாராட்டியுள்ளார்.

இலங்கை அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக 3-வது வரிசையில் களம் இறங்கிய தேவ்தத் படிக்கல், தொடக்கம் முதலே நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

2 சதங்கள் உள்பட மொத்தம் 328 ரன்கள் குவித்து, தொடரின் அதிக ரன் குவித்த வீரர்களில் ஒருவராக திகழ்ந்தார். இதன் மூலம் தொடர்நாயகன் விருதையும் அவர் தட்டிச் சென்றார்.

படிக்கல்லின் பேட்டிங் திறமையை பாராட்டி கெவின் பீட்டர்சன் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

தேவ்தத் படிக்கல் ஒரு மிகச்சிறந்த வீரர். அவரது பேட்டிங் ஸ்டைல் பார்ப்பதற்கே மிகவும் அழகாக இருக்கிறது. இந்திய அணியின் 3-வது வரிசையில் களம் இறங்குவதற்கு அவர் மிகவும் பொருத்தமானவர்.

இப்படிப்பட்ட ஒரு வீரர் கிடைத்திருப்பது இந்திய அணியின் அதிர்ஷ்டம் என்று குறிப்பிட்டுள்ளார்.

படிக்கல்லின் இந்த சிறப்பான ஆட்டம் இந்திய அணியின் பேட்டிங் வரிசைக்கு கூடுதல் பலத்தை அளித்துள்ளதாக ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA