Enter your Email Address to subscribe to our newsletters

கள்ளக்குறிச்சி, 03 ஆகஸ்ட் (ஹி.ச.)
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையாக போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில் உளுந்தூர்பேட்டை அடுத்த எலவனாசூர்கோட்டை பகுதியில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில் சுமார் 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 13 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் வயது 28 என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கடத்தலில் ஈடுபட்ட இளைஞர் மீது போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த கஞ்சா எங்கிருந்து கொண்டு வரப்பட்டது, யாருக்கு விற்பனை செய்ய பதுக்கி வைக்கப்பட்டிருந்தது என்பது குறித்து கடத்தலில் ஈடுபட்ட இளைஞரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b