ஆடிப்பெருக்கு விழா - மாயனூர் காவிரி ஆற்றில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு
கரூர், 03 ஆகஸ்ட் (ஹி.ச.) ஆண்டு தோறும் ஆடி மாதம் 18-ஆம் தேதி காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாக விவசாயிகள், குடும்பப் பெண்கள், புதுமண தம்பதியினர் புத்தாடை அணிந்து நவதானியங்கள் மூலம் உருவாக்கப்பட்ட முளைப்பாரிகளை காவிரியில் கலந்து, பச்சரிசி, க
Mayanur


கரூர், 03 ஆகஸ்ட் (ஹி.ச.)

ஆண்டு தோறும் ஆடி மாதம் 18-ஆம் தேதி காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாக விவசாயிகள், குடும்பப் பெண்கள், புதுமண தம்பதியினர் புத்தாடை அணிந்து நவதானியங்கள் மூலம் உருவாக்கப்பட்ட முளைப்பாரிகளை காவிரியில் கலந்து, பச்சரிசி, கருகமணி, பழங்கள் ஆகியவற்றை பூஜை செய்து படைத்து காவிரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் கரூர் மாவட்டம் மாயனூர் காவேரி ஆற்றில் கடந்த வருடத்தை விட இந்த வருடம் நீர்வரத்து குறைந்துள்ளது.

பொதுமக்கள் காவேரி ஆற்றில் குறைந்த அளவு செல்லும் தண்ணீரில் பொதுமக்கள் அனைவரும் வாழையிலை வைத்து புத்தரிசி படைத்து புதுமண தம்பதியினார்கள் திருமாங்கல்யம் மாற்றியும், முளைப்பாறையை காவிரி ஆற்றில் விட்டும் காவிரி தாய்க்கு நன்றி தெரிவித்து வழிபட்டனர்.

தொடர்ந்து காவிரி கரையோரம் உள்ள மாயனூர் செல்லாண்டியம்மன் கோவிலில் பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

மேலும் கரூர் மாவட்டத்தில் உள்ள வேலாயுதம்பாளையம், நெரூர், வாங்கல், மாயனூர், குளித்தலை உள்ளிட்ட காவிரி கரையோரங்களில் பொதுமக்கள் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN