Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம், 03 ஆகஸ்ட் (ஹி.ச.)
ஆடி 18 ஆம் பெருக்கு தினத்தை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் அதிகாலையிலேயே வழிபாடு செய்வதற்காக பக்தர்கள் குவிந்தனர்.
உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக வருகை தந்துள்ளனர் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
முன்னதாக அக்னிந்திருக்க கடலில் நீராடி ராமேஸ்வரம் கோவிலுக்குள் உள்ள 22 புனித தீர்த்தங்களிலும் புனித நீராடிய பின்னர் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
ராமேஸ்வரத்தில் உள்ள புனித அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடிய வட மாநில பக்தர்கள் மணலால் சிவலிங்கம் செய்து கடல் நீரால் அபிஷேகம் செய்து மலர்களால் அலங்கரித்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.
அது மட்டும் இன்றி அக்னி தீர்த்த கடலுக்கு தீப ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN