Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 03 ஆகஸ்ட் (ஹி.ச.)
ஆடிப்பெருக்கு திருநாளை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி சந்தைக்கு இன்று முழு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
ஆடிப்பெருக்கு விழாவையொட்டி சந்தையின் அனைத்து வர்த்தக நடவடிக்கைகளும் இன்று நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, விவசாயிகள் தங்களது காய்கறிகளை விற்பனைக்காக சந்தைக்கு கொண்டு வர வேண்டாம் என்றும், வியாபாரிகள் மற்றும் மொத்த விற்பனையாளர்களும் காய்கறிகளை வாங்குவதற்காக சந்தைக்கு வர வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மிகப்பெரிய காய்கறி மொத்த சந்தைகளில் ஒன்றாக விளங்கும் ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி சந்தையில், ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கமாகும்.
இதையடுத்து, நாளை முதல் சந்தை வழக்கம்போல் செயல்படும் என மார்க்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ