விளாத்திகுளம் தி.மு.க எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு ஜாமீன் - நீதிமன்றம் உத்தரவு
சென்னை, 03 ஆகஸ்ட் (ஹி.ச) விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஜி.வி. மார்க்கண்டேயன் கோவில்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக புகார்கள் எழுந்தன. இப்புகாரின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட குற்றப
Bail granted to Vilathikulam DMK MLA


சென்னை, 03 ஆகஸ்ட் (ஹி.ச)

விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஜி.வி. மார்க்கண்டேயன் கோவில்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக புகார்கள் எழுந்தன.

இப்புகாரின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இதையடுத்து கடந்த ஜூலை 20-ம் தேதி கைது செய்யப்பட்ட அவர் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, தூத்துக்குடி காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என மார்க்கண்டேயனுக்கு நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

எனினும், சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் நாட்களில் மட்டும் காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து அவருக்கு விலக்கு அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b