பவானி கூடுதுறையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவிரியில் புனித நீராடி சங்கமேஸ்வரர் சுவாமி தரிசனம்
ஈரோடு, 03 ஆகஸ்ட் (ஹி.ச.) ஈரோடு மாவட்டம், பவானியில் அமைந்துள்ள புகழ்பெற்ற கூடுதுறை சங்கமேஸ்வரர் திருக்கோவிலில் ஆடி 18 பெருக்கு திருவிழாவை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் திரண்டனர். ஆடி 18 பெருக்கு நாளையொ
Kooduthurai


ஈரோடு, 03 ஆகஸ்ட் (ஹி.ச.)

ஈரோடு மாவட்டம், பவானியில் அமைந்துள்ள புகழ்பெற்ற கூடுதுறை சங்கமேஸ்வரர் திருக்கோவிலில் ஆடி 18 பெருக்கு திருவிழாவை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.

ஆடி 18 பெருக்கு நாளையொட்டி அதிகாலை முதலே பக்தர்கள் பவானி கூடுதுறையில் சங்கமிக்கும் காவிரி ஆற்றில் புனித நீராடினர்.

புனித நீராடிய பின்னர், ஆற்றங்கரையில் சூரிய பகவானுக்கு சிறப்பு வழிபாடு நடத்தி, தங்கள் குடும்ப நலன், வளம் மற்றும் விவசாய செழிப்பு வேண்டி பிரார்த்தனை செய்தனர்.

அதனைத் தொடர்ந்து பக்தர்கள் புகழ்பெற்ற அருள்மிகு சங்கமேஸ்வரர் மற்றும் வேதநாயகி அம்பாள் திருக்கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

கோவிலில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.

ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கரூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்களுடன், கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும் குடும்பத்துடன் வருகை தந்து காவிரி ஆற்றில் புனித நீராடி சங்கமேஸ்வரரை வழிபட்டனர்.

Hindusthan Samachar / ANANDHAN