பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி
பீகார், 03 ஆகஸ்ட் (ஹி.ச.) பிகாரில் நடைபெற்ற பங்கீபூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில், ஜன சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்றிருப்பது மாநில அரசியலில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. நீண்ட காலமாக பா.ஜ.க.வின் பலமான கோட்டையாக கரு
prashanth kishor


பீகார், 03 ஆகஸ்ட் (ஹி.ச.)

பிகாரில் நடைபெற்ற பங்கீபூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில், ஜன சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்றிருப்பது மாநில அரசியலில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

நீண்ட காலமாக பா.ஜ.க.வின் பலமான கோட்டையாக கருதப்பட்ட இந்தத் தொகுதியில் ஏற்பட்டுள்ள இந்த முடிவு, அரசியல் வட்டாரங்களில் பரவலாக கவனத்தை ஈர்த்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், பா.ஜ.க.வின் தேசிய தலைவர் நிதின் நபீன் சுமார் 51 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.

மேலும், பங்கீபூர் தொகுதியில் தொடர்ந்து நான்கு முறை பா.ஜ.க. வெற்றி பெற்று தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்தியிருந்தது.

இந்நிலையில், நிதின் நபீன் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததால் இடைத்தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் பிரசாந்த் கிஷோர் சுமார் 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P