Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 03 ஆகஸ்ட் (ஹி.ச.)
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME) இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழ்வதால், அவற்றின் வளர்ச்சிக்காக BRICS நாடுகளுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினர் எல்.கே. சுதீஷ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில்,
BRICS நாடுகளுக்கிடையேயான MSME ஒத்துழைப்பு, தொழில்நுட்ப பரிமாற்றம், ஏற்றுமதி வாய்ப்புகள் மற்றும் சர்வதேச சந்தை அணுகல் குறித்து மாநிலங்களவையில் கேள்வி எழுப்பியதாக தெரிவித்துள்ளார்.
இதற்கு மத்திய அரசு அளித்த பதிலில், இந்தியா தலைமையில் நடைபெற்ற முதல் BRICS MSME Forum மூலம் உறுப்பினர் நாடுகளுக்கிடையே நீடித்த ஒத்துழைப்பை உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், MSME நிறுவனங்களுக்கு எளிதான நிதி வசதி, டிஜிட்டல் தொழில்நுட்ப பயன்பாடு, திறன் மேம்பாடு, பசுமை தொழில்நுட்பம், தரச்சான்றிதழ்கள் மற்றும் உலகளாவிய சந்தைகளில் இந்திய MSME நிறுவனங்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்.
தமிழகம் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த தொழில் முனைவோர் உலகளவில் மேலும் பல சாதனைகள் படைக்க தேவையான கொள்கைகள் உருவாகவும், அவர்களின் குரலை மாநிலங்களவையில் தொடர்ந்து வலியுறுத்துவேன் என்றும் எல்.கே. சுதீஷ் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P